புதிய இயல்பு நிலையை உருவாக்குவோம் வாரீர்.
கோவிட்-19 முடக்கங்களுக்குப் பிறகு அனைவரும் இயல்பு நிலைக்குத் திரும்ப விரும்புகிறார்கள். நாம் அனைவரும் எமது வாழ்க்கையில் நடைபெறும் சில விருப்பமான செயல்களைத் தொலைத்துள்ளோம். அதன் காரணமாக பலர் பழைய இயல்பு நிலைக்குத் எப்போது திரும்புவோம் என்று காத்துக்கொண்டுள்ளனர். எமது சமூகத்தின் எல்லா நிலையினரும் அவ்வாறு பழைய சாதாரண நிலைக்குத் திரும்ப ஏங்குகிறார்களா ? இதற்கான பதில், இல்லை. எமது சமூகத்தின் எல்லா நிலையினரும் அவ்வாறு பழைய சாதாரண நிலைக்குத் திரும்ப ஏங்குகவில்லை. பெண்களை விட அதிகமான ஆண்கள் பழைய சாதாரண நிலைக்குத் திரும்ப விரும்புகிறார்கள். ஏழை மக்களைவிட விட அதிகமாக பணக்காரர்கள் அந்த பழைய இயல்புநிலைக்குத் திரும்ப விரும்புகிறார்கள். ஏனெனில் அந்த பழைய நிலை ஆண்களுக்கும், பணக்காரர்களுக்கும் , பெரும் முதலாளிகளுக்கும் சலுகைகளை, அனுகூலத்தை , அதிகாரத்தை, முன்னுரிமையை கொடுத்தது. அதனாலேயே வளமைக்கு நாடு எப்போது திரும்பும் என அவர்கள் காத்திருக்கிறார்கள். ஏழைகள், புறந்தள்ளப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், கைம்பெண்கள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள்,சிறுவர் தோட்டத்தொழி...